வாக்கு எண்ணும் பணியில் 156 அலுவலர்கள், 3 பார்வையாளர்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 வாக்கு எண்ணும் மையங் களில் 156 அலுவலர்கள், 3 பார்வையாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 வாக்கு எண்ணும் மையங் களில் 156 அலுவலர்கள், 3 பார்வையாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்தார்.
4 நகராட்சி
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேசுவரம் ஆகிய 4 நகராட்சிகள், அபிராமம், கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், சாயல்குடி மற்றும் தொண்டி ஆகிய 7 பேரூராட்சிகள் என மொத்தம் 11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை ஆகிய நகராட்சிகள் மற்றும் மண்டபம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை ராமநாதபுரம் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரியிலும், பரமக்குடி நகராட்சி மற்றும் அபிராமம், முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணிக்கை பரமக்குடி அழகப்பா பல்கலைகழக உறுப்பு கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது.
10 சுற்று
ராமநாதபுரம் நகராட்சிக்கு 10 சுற்றுகளாக 7 மேஜைகளில் 21 வாக்கு எண்ணும் பணியாளர்களும், ராமேசுவரம் நக ராட்சிக்கு 6 சுற்றுகளாக 7 மேஜைகளில் 21 வாக்கு எண்ணும் பணியாளர்களும், கீழக்கரை நகராட்சிக்கு 6 சுற்றுகளாக 4 மேஜைகளில் 21 வாக்கு எண்ணும் பணியாளர்களும், பரமக்குடி நகராட்சிக்கு 5 சுற்றுகளாக 8 மேஜைகளில் 24 வாக்கு எண்ணும் பணியாளர்களும், மண்டபம் பேரூ ராட்சிக்கு 4 சுற்றுகளாக 4 மேஜைகளில் 12 வாக்கு எண்ணும் பணியாளர்களும், தொண்டி பேரூராட்சிக்கு 4 சுற்றுகளாக 4 மேஜைகளில் 12 வாக்கு எண்ணும் பணியாளர்களும், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு 4 சுற்றுகளாக 4 மேஜைகளில் 12 வாக்கு எண்ணும் பணியாளர்களும், அபிராமம் பேரூராட்சிக்கு 3 சுற்றுகளாக 3 மேஜைகளில் 9 வாக்கு எண்ணும் பணியாளர்களும், சாயல்குடி பேரூராட்சிக்கு 3 சுற்றுகளாக 3 மேஜைகளில் 9 வாக்கு எண்ணும் பணியாளர்களும், கமுதி பேரூராட்சிக்கு 2 சுற்றுகளாக 2 மேஜைகளில் 6 வாக்கு எண்ணும் பணியாளர்களும், முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு 3 சுற்றுகளாக 3 மேஜைகளில் 9 வாக்கு எண்ணும் பணியாளர்கள் என மொத்தம் 156 வாக்கு எண்ணும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கண்காணிப்பு
2 வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறை, வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறை, உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிகளை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் ஒரு வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், ஜெனரேட்டர் வசதிகள், மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நடவடிக்கை
அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும், நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடை பெற அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.