சேவூர்:
சேவூர் அருகே வேட்டுவபாளையம் புளியங்காடு பகுதியில் 2 ஆடுகள் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்துள்ளது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், 2 ஆடுகளையும் திருடிச் சென்றனர். ஆடுகளை 2 வாலிபர்கள் பிடித்து செல்வதை பார்த்த தோட்ட உரிமையாளர் சுரேஷ், சேவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பொதுமக்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை துரத்திப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் சங்கர் (வயது 26), மோகன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து இரு ஆடுகள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.