பொள்ளாச்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி போலீசார், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்கு அளிக்கும் வகையில் பொள்ளாச்சி நகராட்சி, சூளேஸ்வரன்பட்டி, ஜமீன்ஊத்துக்குளி, சமத்தூர், கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன்புதுர், ஒடையகுளம், நெகமம், கிணத்துக்கடவு ஆகிய பேரூராட்சிகளில் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. இங்கு அரசு ஊழியர்கள், போலீசார் மற்றும் ஆசிரியர்கள் தபால் வாக்கினை செலுத்தினர்.
நகராட்சி, பேரூராட்சி அலுவலங்களில் உள்ள பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். அங்கு வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டு தபால் ஓட்டு எண்ணப்படும். இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு வரை தபால் வாக்கு செலுத்தலாம் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.