காகங்களிடம் இருந்து ஆந்தையை மீட்ட சிறுமி
காகங்களிடம் இருந்து ஆந்தையை மீட்ட சிறுமி
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் உப்பு கிணறு வீதியில் ஒரு ஆந்தை பறந்து திரிந்தது. அந்த ஆந்தையை கண்ட காகங்கள் கூட்டமாக பறந்து வந்து கொத்தின. உடனே காகங்களிடம் இருந்து தப்பிக்க ஆந்தை போராடியது. இந்த காட்சியை, அங்கு விளையாடி கொண்டு இருந்த பிரியதர்ஷினி என்ற சிறுமி கண்டு காகங்களை விரட்ட முயன்றார்.
தொடர் முயற்சிக்கு பிறகு காகங்களை விரட்டிவிட்டு ஆந்தையை மீட்டார். பின்னர் பதற்றத்துடனும், சோர்வாகவும் இருந்த ஆந்தைக்கு தண்ணீர் கொடுத்தார். மேலும் ஆழியார் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினரிடம், ஆந்தை ஒப்படைக்கப்பட்டது. மேலும் ஆந்தையை காப்பாற்றிய சிறுமியை வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.