வாகனங்கள் நிறுத்த அதிக கட்டணம் வசூலிப்பதால் கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அவதிப்படுகின்றனர்
வாகனங்கள் நிறுத்த அதிக கட்டணம் வசூலிப்பதால் கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அவதிப்படுகின்றனர்;
கோவை
வாகனங்கள் நிறுத்த அதிக கட்டணம் வசூலிப்பதால் கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
பிரமாண்ட ‘பார்க்கிங்’
கோவையில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து சராசரி யாக தினமும் 36 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.
கொரோனா பரவலுக்கு பிறகு தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக குறைந்து உள்ளது.
கோவையில் இருந்து சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக் கும், சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் மற்றும் அவர்களை வழியனுப்ப வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வசதிக்காக 100 கார்களை நிறுத்தும் வகையில் விமான நிலைய நுழை வாயில் அருகே பிரமாண்ட ‘பார்க்கிங்’ வசதி உள்ளது.
பயணிகள் அவதி
அங்கு வாகனங்களை நிறுத்த நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரம் வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி பயணிகளை வாகனங்களில் இறக்கி விடவும்,
ஏற்றி செல்லவும் 3 நிமிடங்களுக்குள் இருந்தால் எவ்வித கட்டணமும் கிடையாது. அரை மணி நேரத்துக்குள் பயணியை இறக்கி விட அல்லது ஏற்றி செல்ல ரூ.20 கட்டணம், அரைமணி நேரத்துக்கு மேல் ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் பயணிகளின் வாகனங்கள் நிற்கும் நேரத்தை கணக்கில் எடுக் காமல் ரூ.60 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
‘பார்க்கிங்’ கட்ட ணம் வசூலிக்கும் இடத்தில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளிகள் தான் பணியில் உள்ளனர்.
எனவே அவர்களிடம் பேசி விளக்கம் பெற முடியாததால் இந்தி தெரியாத பயணிகள் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கூடுதல் கட்டணம்
இது குறித்து கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறியதாவது
விமான நிலைய வளாகத்தில் ‘பார்க்கிங்’ பகுதியில் முறைகேடாக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சில புகார்கள் வந்து உள்ளன.
எனவே அங்கு கண்காணிப்பை அதிகரிக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். மேலும் அங்கு புகார் பெட்டி வைக்கவும்,
முறைகேடாக கூடுதல் ‘பார்க்கிங்’ கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் எந்த புகாரும் வராத வகையில் செயல்பட வேண்டும் என்று ‘பார்க்கிங்’ ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.