கோவையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் 350 ஊழியர்களுக்கு கோவை மாநகராட்சி கலையரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது

கோவையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் 350 ஊழியர்களுக்கு கோவை மாநகராட்சி கலையரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது

Update: 2022-02-21 14:21 GMT

கோவை
கோவையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் 350 ஊழியர்களுக்கு கோவை மாநகராட்சி கலையரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு

கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் 778 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 

கோவை மாநகராட்சி தேர்தலில் 15 லட்சத்து 65 ஆயிரத்து 158 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். 

இதில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 164 ஆண்கள், 4 லட்சத்து 17 ஆயிரத்து 873 பெண்கள், 3-ம் பாலினத்தவர்கள் 72 பேர் என மொத்தம் 8 லட்சத்து 39 ஆயிரத்து 109 பேர் வாக்களித்தனர். 

இது 53.61 சதவீத வாக்குப்பதிவாகும்.வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. 

இன்று வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு மேல் தெரியத் தொடங்கும் என்று தெரிகிறது. 

இதற்காக வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு அறைக்கு 14 மேஜைகள் வீதம் மொத்தம் 10 அறைகளில் 140 மேஜைகள் போடப்பட்டு உள்ளன.

கோவை மாநகராட்சியில் வாக்கு எண்ணும் பணியில் 350 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். 

அவர்களுக்கான வாக்கு எண்ணுவது குறித்த பயிற்சி கோவை ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடை பெற்றது. இதற்கு மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தலைமை தாங்கினார்.

பயிற்சி

இதில் பெல் நிறுவன அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எவ்வாறு எண்ண வேண்டும்?. 

எந்திரங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை சரி செய்வது எப்படி? என்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள பேட்டரிகளில் 3 மாதம் வரை சார்ஜ் இருக்கும். அதில் பழுது ஏற்பட்டால் உடனடியாக அகற்றி புதிய பேட்டரி பொருத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. 

மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட ஊழியர்கள், வாக்கு எண்ணுவ தில் தங்களுக்கு  உள்ள சந்தேகங்களை கேட்டனர். 

அதற்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர். 

மேலும் செய்திகள்