அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு

தி.மு.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-21 13:48 GMT
நிலக்கோட்டை:

நிலக்கோட்டை பேரூராட்சி 7-வது வார்டில், அ.தி.மு.க. சார்பில் முத்துக்குமார் (வயது 37) போட்டியிட்டார். இவருக்கும், நிலக்கோட்டை நாகலிங்கசாமி கோவில் தெருவை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வக்குமார் (56) என்பவருக்கும் இடையே தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வக்குமார் வீட்டுக்கு சென்ற முத்துக்குமார் மற்றும் சிலர், அவரை அசிங்கமாக பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. 

இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் செல்வக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் முத்துக்குமார், மணிஷ் (29), சக்திவேல் (24), அருண்பாண்டி (22), செந்தில் (43) ஆகிய 5 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்