போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்
திருமண கோலத்தில் போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 21). பட்டதாரியான இவர், தற்போது விவசாயம் செய்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த, அவருடைய உறவினர் அகல்யா (19). கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு, அகல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து காதல்ஜோடி நேற்று வீட்டை விட்டுவெளியேறி, வேடசந்தூர் அருகே உள்ள அரியப்பித்தம்பட்டி பொம்மையம்மன் சுவாமி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு, மாலையுடன் திருமண கோலத்தில் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினர் திருமணத்தை ஏற்று கொண்டனர். ஆனால் அகல்யாவின் பெற்றோர் திருமணத்தை ஏற்று கொள்ளவில்லை.
இதனையடுத்து காதல்ஜோடியை வாழ்த்தி, கோபாலகிருஷ்ணனின் பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.