ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

ராணிப்பேட்டையில் ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-02-21 12:54 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியை சேர்ந்தவர் வரதராஜன்,  ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி லலிதா (வயது 58). 

இவர் அடிக்கடி உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு லலிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்