ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

Update: 2022-02-20 22:46 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 258 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 55 பேருக்கு தொற்று உறுதியானது. இந்தநிலையில் நேற்று புதிதாக 47 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 420 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 772 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 153 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 733 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்