காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த பெண்
கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு மோட்டார் சைக்கிளில் பெண் வந்தார்.
கன்னியாகுமரி:
கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு மோட்டார் சைக்கிளில் பெண் வந்தார்.
பஞ்சாப்பை சேர்ந்தவர் அம்பிகாசோனி (வயது 45). இவர் கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு கடந்த 12-ந் தேதி மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். நேற்று காலையில் கன்னியாகுமரி வந்தடைந்தார். அவரை கன்னியாகுமரி சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் வரவேற்றனர்.
மீண்டும் அவர் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு அடுத்த மாதம் 5-ந் தேதி காஷ்மீரில் தனது பயணத்தை முடித்துக் கொள்கிறார். அவர் செல்லும் இடங்களில் கொரோனாவுக்கு எதிராக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.