பெண் கற்பழித்து படுகொலை

குந்துகோல் அருகே வனப்பகுதியில் பெண்ணை கற்பழித்து கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;

Update: 2022-02-20 20:52 GMT
உப்பள்ளி:

ஆடு மேய்க்க சென்றார்

  பெலகாவி மாவட்டம் பைலகொங்கலா தாலுகாவை சேர்ந்தவர் லட்சுமி(வயது 28). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், பெலகாவியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு நடந்து சென்று ஆடுகளை மேய்ப்பது வழக்கம். 

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா எரகுப்பி கிராமத்திற்கு ஆடுகளை மேய்த்து கொண்டு நடந்து சென்றார். அப்போது அவர் செல்லும் வழியில் பட்டி அமைத்து தங்கி வந்தார்.

கற்பழித்து கொலை

  இந்த நிலையில் ஆடுகளை மேய்க்க சென்ற லட்சுமி குறிப்பிட்ட நாளில் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் வந்து தேடி பார்த்துள்ளனர்.

  அப்போது குந்துகோல் அருகே வனப்பகுதியில் லட்சுமி பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், குந்துகோல் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் லட்சுமி, கற்பழிக்கப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது ஆடு மேய்க்க சென்ற லட்சுமியை, மர்மநபர்கள் கடத்தி தூக்கி சென்று கற்பழித்துள்ளனர். பின்னர் நடந்ததை மூடி மறைக்க அவர்கள், லட்சுமியை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு சென்றுள்ளனர்.

வலைவீச்சு

  ஆனால் இந்த செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து குந்துகோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  ------------------

மேலும் செய்திகள்