அலங்காநல்லூர் பேரூராட்சியில்-பெண்களே அதிகஅளவில் வாக்களித்தனர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அலங்காநல்லூர் பேரூராட்சியில் பெண்களே அதிகஅளவில் வாக்களித்தனர்.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் தேர்தல் நடந்தது. இதற்காக குறவன்குளம் அரசு தொடக்கப்பள்ளி, அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி, வலசை அரசு தொடக்கப்பள்ளியில் 2 மையங்கள் என மொத்தம் 5 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த மையங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நேரம் முதலே வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர்.
அலங்காநல்லூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் மொத்தம் 9 ஆயிரத்து 959 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 6 மணி நிலவரப்படி மொத்தம் 8,405 வாக்குகள் பதிவானது. இதில் ஆண் வாக்காளர்கள் 4 ஆயிரத்து 74-ம், பெண் வாக்காளர்கள் 4,331-ம் வாக்களித்தனர். ஆண்களை காட்டிலும் 260 பெண்கள் அதிக அளவில் ஓட்டு போட்டிருந்தனர். அலங்காநல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 84.41 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.