பேரையூர் அரசு பெண்கள் பள்ளியில் பலத்த பாதுகாப்பு

3 பேரூராட்சிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணும் மையமான பேரையூர் அரசு பெண்கள் பள்ளியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Update: 2022-02-20 20:37 GMT
பேரையூர்,

டி.கல்லுப்பட்டி, எழுமலை, பேரையூர் ஆகிய பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த 3 பேரூராட்சிகளிலும் பதிவான வாக்கு எந்திரங்கள் பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு உள்ளன. இங்கு நாளை(செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டிபள்ளி கட்டிடத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.எழுமலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் பதிவான வாக்குகள் ஒரு சுற்றில் இரண்டு மேஜை போடப்பட்டு இரண்டு வார்டுகள் எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தம் 9 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 
டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 14 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இங்கு 7 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பேரையூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு மொத்தம் 8 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒரு மேஜையில் வாக்கு எண்ணிக்கைக்காக 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அதன் முடிவுகள் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட உள்ளது. பேரையூர் துணை சூப்பிரண்டு சரோஜா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் காந்தி, செல்வம், அருள்சேகர், உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை பேரையூர், டி. கல்லுப்பட்டி, எழுமலை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்