மளிகை கடையில் தீ விபத்து

மதுரை குலமங்கலம் ரோட்டில் உள்ள மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-02-20 20:03 GMT
மதுரை,

மதுரை குலமங்கலம் மெயின்ரோடு கோசாக்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 42). இவர், அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். உள்ளாட்சி தேர்தலையொட்டி, நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது, கடையில் தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்து பொருட்கள் எரிந்து நாசமானது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில்வேல் அளித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்