தென்காசியில் 4 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.;
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று ஒரே நாளில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.
மாவட்டத்தில் இதுவரை 32 ஆயிரத்து 719 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 32 ஆயிரத்து 187 பேர் வீடு திரும்பி உள்ளனர். 42 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 490 பேர் இறந்துள்ளனர்.