திருவல்லிக்கேணியில் போலீசுடன் தகராறு செய்யும் தி.மு.க. - சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ காட்சி

திருவல்லிக்கேணியில் தி.மு.க.வினர் போலீசுடன் தகராறு செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;

Update: 2022-02-20 19:14 GMT
சென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. வாக்குப்பதிவு நடந்தபோது திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தி.மு.க.வினர் சிலர் போலீசுடன் வாக்குவாதம் செய்து தகராறு செய்யும் காட்சி ஒன்று, நேற்று சமூகவலைதளங்களில் வைரலானது. தகராறு செய்யும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

தகராறு செய்பவர்களில் முக்கியமானவர் அந்த வார்டில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரின் கணவர் என்று தெரிய வந்துள்ளது. மேலும் அந்த வார்டு தி.மு.க.வேட்பாளரின் தலைமை ஏஜெண்டு அவர் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் மட்டத்தில் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்