ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள கூரியூர் பகுதியை சேர்ந்தவர் அக்பர்அலி என்பவரின் மகன் முகம்மது யாசின் (வயது35). இவர் மோட்டார் சைக்கிளில் சத்திரக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். லாந்தை காலனி அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடல் முழுவதும் அடிபட்ட நிலையில் மயங்கி கிடந்தவரை அந்த பகுதியினர் மீட்டு ஆம்புலன்சில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முகம்மது யாசின் பரிதாபமாக பலியானார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.