வீட்டில் நகை திருட்டு
பாளையங்கோட்டையில் வீட்டில் நகையை மர்மநபர் திருடிச் சென்றார்.
நெல்லை:
பாளையங்கோட்டை மகாராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் மந்திரம் (வயது 40). இவர் சம்பவத்தன்று கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த மந்திரம் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 கிராம் தங்க நகை மாயமாகி இருந்தது. அதனை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஐகிரவுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.