வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

நெல்லையில் வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-02-20 18:46 GMT
நெல்லை:
நெல்லையில் வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வாலிபர் பிணம்
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு நெல்லை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ்
அதில், இறந்து கிடந்தவர் நெல்லை டவுன் பழனி தெருவை சேர்ந்த முருகன் மகன் மாயாண்டி (வயது 21) என்பதும், நெல்லையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அவர் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வாட்ஸ்- அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. ஆனால் மாயாண்டி தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்