ஆம்பூர் அருகே கோவில் உண்டியல் திருட்டு
ஆம்பூர் அருகே கோவில் உண்டியலை திருடிய மர்ம நபர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை ஆற்றில் வீசிச்சென்றனர்.
ஆம்பர்
ஆம்பூர் அடுத்த துத்திபட்டு பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருடி சென்றுள்ளனர். நேற்று காலை பூசாரி வந்து பார்த்தபோது உண்டியல் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் உமராபாத் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திருட்டுப் போன உண்டியல் தேவலாபுரம் ஆற்றின் அருகே கிடப்பாதாக தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்சத்தனர். அப்போது மர்ம நபர்கள் உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, உண்டியலை ஆற்றில் வீசிச் சென்றது தெரியவந்தது. உண்டியலை மீட்டு கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.