மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலியானார்.
ஆற்காடு
வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கரீம் முல்லாகான் (வயது 22). இவர், மோட்டார் சைக்கிளில் வேலூரில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து வேலூர் நோக்கி சென்றார். ரத்தினகிரியை அடுத்த அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி திடீரென கரீம் முல்லாகான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.