தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-20 18:01 GMT
திருச்சி
சாலையில் விடப்படும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம், திருப்பஞ்சிலி அரசமரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் உணவகம், தங்கும்விடுதி, இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சாலையிலேயே விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருப்பஞ்சிலி, 

மின்விளக்கு அமைக்க கோரிக்கை 
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் பெரிய ஆலம்பட்டி மையப்பகுதியில் மின்விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், இனாம்குளத்தூர். 

குடிநீர் தொட்டியை சரி செய்ய வேண்டும்
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் கண்ணணூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் தேவைக்காக மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் குடிநீர் தொட்டியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து பல மாதங்களாக ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுடமக்கள், கண்ணணூர், 

இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்  
திருச்சி மாவட்டம், சிறுகமணி பேரூராட்சிக்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை காந்திபுரம், சிறுகாடு நடுவாய்க்கால் கரை சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்திவிட்டு, இந்த இடத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
திலீப், பெட்டவாய்த்தலை. 

மேலும் செய்திகள்