அன்னவாசல் அருகே 2 மலைப்பாம்புகள் பிடிபட்டது

2 மலைப்பாம்புகள் பிடிபட்டது.

Update: 2022-02-20 17:53 GMT
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன்பட்டி மேடுகாடு பகுதியை சேர்ந்தவர் அழகர். இவரது குடியிருப்பு பகுதியில் ஆட்டுமந்தை உள்ளது. அங்கு கோழிகளை வளர்த்து வருகிறார். அங்கு தொடர்ந்து கோழி கத்தும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அழகர் அங்கு சென்று பார்த்தபோது மலைப்பாம்பு 2 கோழியை முழுங்கி கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அழகர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில், இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தனர். இதேபோல் இலுப்பூர் அருகே உள்ள சீத்தப்பட்டி என்னும் இடத்தில் சாலையை கடந்து ஊருக்குள் வந்த மலைப்பாம்பு ஒன்றையும் தீயணைப்பு துறையினர் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 2 மலைப்பாம்புகளையும் தீயணைப்பு துறையினர் சாக்கு பையில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி ஏடி காலனியை சேர்ந்த சுரேஷ் என்பவர் வீட்டுதோட்டத்தில் புகுந்த பாம்பை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்