உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-02-20 17:51 GMT
வேப்பந்தட்டை, 
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடி பாரதிநகர் சாலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் சின்னத்துரை தலைமையில் தீவிர வாகன சோதனை செய்யப்பட்டது. அப்போது பூலாம்பாடியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரது கார் அந்த வழியாக சென்றது. அந்த காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது ரூ.1 லட்சத்து ஆயிரத்து 170 இருந்தது தெரியவந்தது. மேலும், இதற்கு உரிய ஆவணம் இல்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் அருள்வாசனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் சரிபார்க்கப்பட்டு மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்