விஷம் குடித்து முதியவர் தற்கொலை
வேதாரண்யம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.;
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாகுடி தெற்கு வடக்குவெளி பகுதியை சேர்ந்தவர் சம்மந்தமூர்த்தி (69). இவர் தேத்தாகுடி தெற்கு முடுக்குவெளி பகுதியில் கடை வைத்திருந்தார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மருத்துவ சிகிச்சை பெற்றும் அவருக்கு வயிற்று வலி தீரவில்லை. இதனால் மனமுடைந்த சம்பந்த மூர்த்தி வயலுக்கு அடிக்க இருந்த விஷ மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு போராடிய அவர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி சம்மந்தமூர்த்தி இறந்தார். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.