நந்திநாதேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
நாகை வடக்கு பொய்கைநல்லூர் நத்திநாதேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெளிப்பாளையம்:
நாகை வடக்கு பொய்கைநல்லூர் நத்திநாதேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஊஞ்சல் உற்சவம்
நாகையை அடுத்த வடக்குபொய்கை நல்லூரில் நந்தி நாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மாசி மக பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதைமுன்னிட்டு நந்தி நாதேஸ்வரர், சவுந்தர நாயகிஅம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர்.இதை தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
சீர்வரிசை எடுத்து வந்த பெண்கள்
முன்னதாக வர்ண விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் சீர்வரிசை எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் சிப்பந்திகள் மற்றும் வீரன்குடிகாடு நந்தவன காளியம்மன் கோவில் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.