புதிதாக 8 பேருக்கு கொரோனா
புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 32 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 160 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.