சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.980-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.980-க்கு ஏலம் போனது.

Update: 2022-02-19 21:45 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 
நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.980-க்கும், முல்லை ரூ.920-க்கும், காக்கடா ரூ.900-க்கும் செண்டுமல்லி ரூ.14-க்கும், பட்டுப்பூ ரூ.60-க்கும், ஜாதி ரூ.850-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.90-க்கும், அரளி ரூ.140-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது. 

மேலும் செய்திகள்