கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.;

Update: 2022-02-19 21:25 GMT
கன்னியாகுமரி:
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காலையில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலில் நீராடி மகிழ்வார்கள். மேலும், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் படகில் சென்று பார்வையிடுவார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடத்தப்பட்டு வருகிறது. 
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால், படகு தளத்தில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்