9-ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்; 4 பேர் கைது

பிறந்த நாள் பரிசு வழங்குவதாக ஏமாற்றி 9-ம் வகுப்பு மாணவியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பங்காருபேட்டை தாலுகாவில் நடந்துள்ளது.

Update: 2022-02-19 20:49 GMT
கோலார் தங்கவயல்: பிறந்த நாள் பரிசு வழங்குவதாக ஏமாற்றி 9-ம் வகுப்பு  மாணவியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பங்காருபேட்டை தாலுகாவில் நடந்துள்ளது.

9-ம் வகுப்பு மாணவி

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா காமசமுத்திரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் ஒரு சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். இ்ந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுமிக்கு பிறந்தநாள் ஆகும். இதையடுத்து அந்த சிறுமி தனது பிறந்தநாளை கொண்டாடினார். 

அப்போது அதேப்பகுதியை சேர்ந்த சிறுமிக்கு நன்கு அறிமுகமான வாலிபர் ஒருவர் சிறுமியிடம் பிறந்தநாள் பரிசு வழங்குவதாக கூறினார். அதாவது சிறுமியின் பிறந்தநாளையொட்டி பரிசு பொருட்கள் வாங்கி வைத்திருப்பதாகவும், தன்னுடன் வந்தால் அவற்றை வழங்குவதாகவும் கூறினார். 

பாலியல் பலாத்காரம்

அதன்பேரில் அந்த வாலிபருடன் சிறுமி சென்றாள். அப்போது அந்த வாலிபருடன் மேலும் 3 பேர் சென்றனர். அவா்கள் பரிசு பொருட்கள் வழங்குவதாக ஆசை காட்டி சிறுமிைய ஏமாற்றி அருகில் உள்ள தோட்டத்திற்குள் அழைத்து சென்றனர். அங்கு வைத்து 4 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று கூறி சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். 

ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். அதையடுத்து அந்த சிறுமியை அவளது பெற்றோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனா். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்.

போக்சோவில் கைது

பின்னர் இதுபற்றி சிறுமியின் பெற்றோர் காமசமுத்திரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் ஆஸ்பத்திரிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் போலீசார் சென்று சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் உடல்நலம் குறித்து டாக்டர்களிடமும் கேட்டறிந்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்தது அதே பகுதியை சேர்ந்த அனந்தகுமார்(வயது 25), காந்தராஜ்(23), பிரவீன்(21) மற்றும் வேணு(19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அனந்தகுமர் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்