ஓடும் பஸ்சில் பெண் அலுவலரின் 5 பவுன் சங்கிலி அபேஸ்

ஓடும் பஸ்சில் பெண் அலுவலரின் 5 பவுன் சங்கிலி அபேஸ் செய்யப்பட்டது

Update: 2022-02-19 20:45 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது30). இவர் வடக்கு அத்தாணியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று அரசு பஸ்சில் அறந்தாங்கியில் இருந்து மேட்டுப்பட்டிக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது கைப்பையில் இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் அபேஸ் செய்து விட்டனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்