கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு

ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.

Update: 2022-02-19 20:38 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை ஜவஹர் தெருவை சேர்ந்தவர் நயினார் மனைவி சீதாலட்சுமி (வயது 80). கணவர் இறந்துவிட்டதால் இவரது மூன்று மகன்களின் ஒருவரான சுப்பிரமணியன் வீட்டில் வசித்து வந்தார். ஊருக்கு கீழ்புறம் உள்ள ஒரு கிணற்றின் அருகே சீதாலட்சுமி நடந்து சென்றபோது நிலைதடுமாறி கிணற்றின் உள்ளே விழுந்தார். இதற்கிடையே சுப்பிரமணியன் தனது தாயை தேடினார். பின்னர் கிணற்று பகுதிக்கு வந்து பார்த்த போது கிணற்றின் உள்ளே சீதாலட்சுமி பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சீதாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்