சிவகாசி மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றும்
சிவகாசி மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றும் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றும் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
வாக்குப்பதிவு
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சியின் 1-வது வார்டு பகுதியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வசித்து வருகிறார். அவர் தனது வாக்கை எஸ்.ஆர். என். பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, சிவகாசி மாநகராட்சி தேர் தலில் பெருவாரியானஇடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
அ.தி.மு.க. கைப்பற்றும்
அ.தி.மு.க.வினர் மேயர், துணை மேயர் பதவிகளை அலங்கரிப்பார்கள். மொத்தம் உள்ள 48 வார்டுகளில் 35 வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.