தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-02-19 20:19 GMT
மின்விளக்கு மாற்றப்பட்டது
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆளூர் பகுதியில் தைக்கா தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் விளக்கு பழுதடைந்து எரியாமல் இருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த விளக்கை மாற்றி விட்டு புதிய விளக்கு அமைத்து எரிய வைத்தனர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலக சந்திப்புக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                  -சலீம், கோட்டார்.
தண்ணீர் வசதி தேவை
நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரத்தில் திருவாழ்மார்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் குப்பைகள் காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், தண்ணீர் வசதியும் இல்லாமல் காணப்படுகிறது. இதனால், அங்கு வரும் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, கோவில் வளாகத்தில் குப்பைகளை அகற்றி தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                         -நிர்மலா ராஜன், சுசீந்திரம்.

மேலும் செய்திகள்