75.69 சதவீத வாக்குகள் பதிவு

அரியலூர் மாவட்டத்தில் 75.69 சதவீத வாக்குகள் பதிவானது.

Update: 2022-02-19 20:12 GMT
அரியலூர்:

வாக்குகள் பதிவு
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இறுதி வாக்காளர்கள் பட்டியலின்படி அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகராட்சியில் 11,724 ஆண் வாக்காளர்களும், 12,794 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 24,518 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஜெயங்கொண்டம் நகராட்சியில் 13,502 ஆண் வாக்காளர்களும், 14,540 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 28,042 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
பேரூராட்சியில் உடையார்பாளையத்தில் 4,676 ஆண் வாக்காளர்களும், 4,770 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 9,446 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வரதராஜன்பேட்டையில் 3,499 ஆண் வாக்காளர்களும், 3,704 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 7,203 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நகராட்சி, பேரூராட்சிகளில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் யாரும் கிடையாது. மொத்தம் 101 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 வரை நடந்தது. இதில் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சிகள், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இருந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது.
அரியலூர் நகராட்சியில் 71.18 சதவீதம்
அதன்படி அரியலூர் நகராட்சியில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குப்பதிவு விவரம் என மாலை 6 மணி வரை பதிவான வாக்குப்பதிவு சதவீத விவரம் வருமாறு:-
காலை 7 மணி முதல் 9 மணி வரை 11.68,
காலை 9 மணி முதல் 11 மணி வரை 27.69,
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 46.26,
மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை 57.86,
மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை 68.79,
மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை 71.18.
இதன்படி அரியலூர் நகராட்சியில் மொத்தம் 71.18 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 17,453 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 8,310 ஆண் வாக்காளர்களும், 9,143 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் குறைவான வாக்குப்பதிவு சதவீதம் என்பது அரியலூர் நகராட்சியில் பதிவாகியுள்ளது.
ஜெயங்கொண்டம் நகராட்சியில் 76.44 சதவீதம்
ஜெயங்கொண்டம் நகராட்சியில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குப்பதிவு விவரம் என மாலை 6 மணி வரை பதிவான வாக்குப்பதிவு சதவீத விவரம் வருமாறு:-
காலை 7 மணி முதல் 9 மணி வரை 11.24,
காலை 9 மணி முதல் 11 மணி வரை 29.26,
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 46.65,
மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை 61.35,
மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை 73.51,
மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை 76.44.
இதன்படி ஜெயங்கொண்டம் நகராட்சியில் மொத்தம் 76.44 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 21,435 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 10,211 ஆண் வாக்காளர்களும், 11,224 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
உடையார்பாளையம் பேரூராட்சியில் 82.35 சதவீதம்
உடையார்பாளையம் பேரூராட்சியில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குப்பதிவு விவரம் என மாலை 6 மணி வரை பதிவான வாக்குப்பதிவு சதவீத விவரம் வருமாறு:-
காலை 7 மணி முதல் 9 மணி வரை 17.63,
காலை 9 மணி முதல் 11 மணி வரை 36.84,
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 57.12,,
மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை 70.93,
மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை 81.56,
மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை 82.35.
இதன்படி உடையார்பாளையம் பேரூராட்சியில் மொத்தம் 82.35 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 7,779 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 3,712 ஆண் வாக்காளர்களும், 4,067 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் அதிகமான வாக்குப்பதிவு சதவீதம் உடையார்பாளையம் பேரூராட்சியில் பதிவாகியுள்ளது.
வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 79.33 சதவீதம்
வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குப்பதிவு விவரம் என மாலை 6 மணி வரை பதிவான வாக்குப்பதிவு விவரம் வருமாறு:-
காலை 7 மணி முதல் 9 மணி வரை 16.73, காலை 9 மணி முதல் 11 மணி வரை 39.29,
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 60.95,
மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை 70.21,
மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை 78.51,
மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை 79.33.
இதன்படி வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் மொத்தம் 79.33 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 5.714 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 2,707 ஆண் வாக்காளர்களும், 3,007 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் 75.69 சதவீதம்
மாவட்டத்தில் மொத்தம் 52,381 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 24,940 ஆண் வாக்காளர்களும், 27,441 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மொத்தத்தில் அரியலூர் மாவட்டத்தில் 75.69 சதவீத ஓட்டுகள் பதிவானது. மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டுப்பாட்டு கருவிகளை சீல் வைத்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கும் எண்ணும் மையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அரியலூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் அரியலூர் நகராட்சி அலுவலகத்திலும், ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வைத்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதனால் அந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்