நெல்லை மாவட்டத்தில் 17 பேரூராட்சிகளில் 69.20 சதவீத வாக்குப்பதிவு
நெல்லை மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் சராசரியாக 69.20 சதவீத வாக்குகள் பதிவானது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் சராசரியாக 69.20 சதவீத வாக்குகள் பதிவானது.
17 பேரூராட்சிகள்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது. சில இடங்களில் மாலை 5 மணிக்கு அதிக அளவில் வாக்காளர்கள் வந்ததால் இரவு வரையிலும் வாக்குப்பதிவு நீடித்தது.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 926 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 944 வாக்குகள் பதிவானது. இது 69.20 சதவீதமாகும்.
சேரன்மாதேவி
சேரன்மகாதேவி பேரூராட்சியில் மொத்தம் 16,000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10,492 வாக்குகள் பதிவானது. இது 65.58 சதவீதமாகும். ஏர்வாடி பேரூராட்சியில் மொத்தம் 15,978 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10,141 வாக்குகள் பதிவானது. இது 63.47 சதவீதமாகும்.
கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் மொத்தம் 7,409 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5,952 வாக்குகள் பதிவானது. இது 80.33 சதவீதமாகும். கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் மொத்தம் 22,736 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 15,845 வாக்குகள் பதிவானது. இது 69.69 சதவீதமாகும்.
மணிமுத்தாறு
மணிமுத்தாறு பேரூராட்சியில் மொத்தம் 8,143 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5,507 வாக்குகள் பதிவானது. இது 67.63 சதவீதமாகும். மேலசெவல் பேரூராட்சியில் மொத்தம் 5,541 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4,234 வாக்குகள் பதிவானது. இது 76.41 சதவீதமாகும்.
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 8,845 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6,182 வாக்குகள் பதிவானது. இது 69.89 சதவீதமாகும். முக்கூடல் பேரூராட்சியில் மொத்தம் 12,847 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 9,581 வாக்குகள் பதிவானது. இது 74.58 சதவீதமாகும்.
நாங்குநேரி
நாங்குநேரி பேரூராட்சியில் மொத்தம் 5,370 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3,849 வாக்குகள் பதிவானது. இது 71.68 சதவீதமாகும். நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் மொத்தம் 14,125 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 9,418 வாக்குகள் பதிவானது. இது 66.68 சதவீதமாகும்.
பணகுடி பேரூராட்சியில் மொத்தம் 27,190 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10,492 வாக்குகள் பதிவானது. இது 65.58 சதவீதமாகும். பத்தமடை பேரூராட்சியில் மொத்தம் 14,330 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10,069 வாக்குகள் பதிவானது. இது 70.27 சதவீதமாகும்.
திசையன்விளை
சங்கர்நகர் பேரூராட்சியில் மொத்தம் 7,272 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4,633 வாக்குகள் பதிவானது. இது 63.71 சதவீதமாகும். திருக்குறுங்குடி பேரூராட்சியில் மொத்தம் 8,500 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6,252 வாக்குகள் பதிவானது. இது 73.55 சதவீதமாகும்.
திசையன்விளை பேரூராட்சியில் மொத்தம் 20,915 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 15,023 வாக்குகள் பதிவானது. இது 71.83 சதவீதமாகும். வடக்கு வள்ளியூர் பேரூராட்சியில் மொத்தம் 26,600 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 17,974 வாக்குகள் பதிவானது. இது 67.52 சதவீதமாகும்.
வீரவநல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 15,125 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10,296 வாக்குகள் பதிவானது. இது 68.07 சதவீதமாகும். நெல்லை மாவட்ட பேரூராட்சிகளில் கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் அதிகபட்சமாக 80.33 சதவீத வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.