சிவகங்கை
சிவகங்கை 20-வது வார்டில் பா.ஜ.க. சார்பில் ஹேமாமாலினி என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று காலை வாக்குப்பதிவு நடைபெற்ற மையத்திற்கு வந்த ஹேமாமாலினியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் திட்டியதாக தெரிகிறது. அவர் அது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் அவர் வாக்குச்சாவடி மையத்தின் வாயிலில் உள்ள சாலையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்து அங்குவந்த நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அவரை சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட செய்தனர்.