வாக்குச்சாவடி மையங்களில் டிஐஜி ஆய்வு
வாக்குச்சாவடி மையங்களில் டிஐஜி ஆய்வு
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பைபாஸ் அருகே உள்ள தனியார் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வாக்குசாவடி மையத்தில் பாதுகாப்பு பணிகளை வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
இதேபோல் ஆம்பூரில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
ெதாடர்ந்து நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
பின்னர் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையமான வக்கணம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இங்கு டி.ஐ.ஜி. ஆனிவிஜயா திடீரென ஆய்வு செய்தார்.
முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் இந்த வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.