கரும்பு ஏற்றிவந்த லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்

நாட்டறம்பள்ளி அருேக கரும்பு ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அங்கு வந்த எம்.எல்.ஏ. வந்து பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தார்.

Update: 2022-02-19 18:37 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருேக கரும்பு ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அங்கு வந்த எம்.எல்.ஏ. வந்து பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தார்.

மின் கம்பம் சேதம்

திருப்பத்துார் மாவட்டம் புதுப்பூங்குளம் அருகே ஜமுனபுதூர் கிராமத்தில் இருந்து 4 லாரிகள் கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு நாட்டறம்பள்ளி அருகில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு திருப்பத்தூர்-நாட்டறம்பள்ளி சாலையில் புதுப்பேட்டை வழியாக சென்று கொண்டு இருந்தன.

பி.பந்தாரப்பள்ளி அருகே அடுத்தடுத்து வரிசையாக 4 லாரிகளும் வந்தன. 3-வதாக வந்த கரும்பு லாரி முன்னால் சென்ற இரு இரும்பு லாரிகளை முந்திச்செல்ல முயன்றது. 

அப்போது சாலை ஓரம் இருந்த புளிய மரக் கிளைகள் மீது கரும்புகள் மோதியதில், புளிய மரக் கிளைகள் முறிந்தன. இதனால் புளியமரத்தை ஒட்டியிருந்த ஒரு மின்கம்பமும் சேதம் அடைந்தது. 

இதனால் அப்பகுதியில் திடீெரன மின் தடை ஏற்பட்டது. 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் மின் அழுத்தத்தால் சேதமடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பலர் திரண்டு வந்து கரும்பு லாரியை சிறை பிடித்தனர். 

ேபச்சு வார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

சேதம் அடைந்த மின்சாதனப் பொருட்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும், என வலியுறுத்தினர்.

தகவலை கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த ஜோலார்பேட்டை தொகுதி க.தேவராஜி எம்.எல்.ஏ, திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அந்த நேரத்தில் நாட்டறம்பள்ளி மின்வாரியத்துறை அதிகாரிகள் வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சிறை பிடித்த கரும்பு லாரியை பொதுமக்கள் விடுவித்தனர்.

 இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்