நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 68.03 சதவீத வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 68.03 சதவீத வாக்குப்பதிவானது.

Update: 2022-02-19 18:24 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கு நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் விவரம் வருமாறு:-
ராமநாதபுரம் நகராட்சியில் 62.74, ராமேசுவரம் 79.77, பரமக்குடி  67.85, கீழக்கரை  53.07 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதன்படி நகராட்சியில் மொத்தம் 66.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.மண்டபம் பேரூராட்சியில் 74.58, தொண்டி 68.71, ஆர்.எஸ்.மங்கலம் 72.41, அபிராமம் 68.84, சாயல்குடி 74.06, கமுதி 80.02, முதுகுளத்தூர் 77.88. இதன்படி பேரூராட்சியில் மொத்தம் 73.18.
ஒட்டுமொத்தமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 365 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 40 ஆயிரத்து 376 பெண் வாக்காளர்களும், 27 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 768 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேற்று மாலை வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் 88 ஆயிரத்து 712 ஆண் வாக்கா ளர்களும், 99 ஆயிரத்து 583 பெண் வாக்காளர்களும், ஒரு திருநங்கையும் என மொத்தம் 1 லட்சத்து 88 ஆயிரத்து 296 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 68.03 சதவீதம் ஆகும். 
இதன்படி மாவட்டம் முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 8.88 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 23.60 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 39.43 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 52.46 சதவீதமும், 5 மணி நிலவரப்படி 65.06 சதவீதமும் இறுதி நிலவரப்படி 68.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
நேற்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் மூடி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்