வார்டு மறுவரையறை குளறுபடியால் வாக்காளர்கள் அவதி

வார்டு மறுவரையறை குளறுபடியால் வாக்காளர்கள் அவதி அடைந்தனர்.

Update: 2022-02-19 18:00 GMT
தொண்டி, 
தொண்டி பேரூராட்சியில் வார்டு மறுவரையறை செய்யப் பட்டதில் ஏற்கனவே இருந்த பழைய வார்டுகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே இருந்த வார்டு களில் இருந்து பல்வேறு வீதிகள், தெருக்கள், குடியிருப்புகள் தற்போது வேறுவேறு வார்டுகளில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் வேறுவேறு வார்டுகளில் மாறி இருந்ததால் வாக்காளர்கள் தங்களின் பெயர் எந்த வார்டில் உள்ள வாக்காளர் பட்டி யலில் இடம் பெற்றுள்ளது என்பதை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமங்களுக்கும்அவதிக்கும் ஆளாகினர். இந்த குளறுபடிகள் காரணமாக வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பூத் சிலிப்களை வழங்குவதில்  சிரமம் ஏற்பட்டது. வார்டுகள் மறு வரையரை செய்யப ்பட்டதில் ஏராளமான தெருக்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதனால் வாக்காளர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்