ஆண்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க மறுத்த திருநங்கைகள்

தேனியில் ஆண்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க திருநங்கைகள் மறுத்து விட்டனர்.

Update: 2022-02-19 17:49 GMT
தேனி :

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டுக்கான வாக்குச்சாவடிகள் தேனி பி.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்தன. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வாக்குச்சாவடி இருந்தன. இங்கு வாக்களிக்க திருநங்கைகள் சுமார் 20 பேர் வந்தனர். அவர்களின் வாக்குகள் ஆண்கள் வாக்குச்சாவடியில் இடம் பெற்றிருந்தன. 

இதனால், அவர்கள் தங்களை பெண்கள் வாக்குச்சாவடியில் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆண்கள் வாக்குச்சாவடியில் தாங்கள் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று கூறி மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து மண்டல தேர்தல் அலுவலர் கலையரசன் அங்கு வந்து திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதையடுத்து அவர் தேர்தல் அதிகாரிகளிடம் கலந்தாலோசனை செய்த பின்னர், இரு வாக்குச்சாவடிகளும் ஒரே பாகம் எண்ணின் கீழ் வருவதால் திருநங்கைகளை பெண்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க அனுமதி அளித்தார். பின்னர் திருநங்கைகள் வாக்களித்தனர்.

மேலும் செய்திகள்