69.19 சதவீதம் வாக்குப்பதிவு
நாகை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 69.19 சதவீதம் வாக்குப்பதிவானது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகளுக்கும், கீழ்வேளூர், திட்டச்சேரி, தலைஞாயிறு, வேளாங்கண்ணி ஆகிய 4 பேரூராட்சிகளுக்கும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் நாகை நகராட்சியில் 63.73 சதவீதமும் வேதாரண்யம் நகராட்சியில் 75.51 சதவீதமும் வாக்குப்பதிவானது. அதேபோல கீழ்வேளூர் பேரூராட்சியில் 74.70 சதவீதமும், வேளாங்கண்ணி பேரூராட்சியில் 81.85 சதவீதமும், தலைஞாயிறு பேரூராட்சியில் 83.91 சதவீதமும், திட்டச்சேரி பேரூராட்சியில் 66.09 சதவீதமும் வாக்குப்பதிவானது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 69.19 சதவீதம் வாக்குப்பதிவானது.