லாரியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு

தூத்துக்குடி அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-02-19 17:17 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள கீழதட்டப்பாறையை சேர்ந்தவர் வைரவன். லாரி டிரைவர். இவரது மகன் பிரவீன்காந்த் (வயது 14). இவர் தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் மேலதட்டப்பாறைக்கு சென்று விட்டு மீண்டும் நண்பர்களுடன் ஊருக்கு திரும்பினார். அப்போது, அந்த வழியாக வந்த லோடு லாரியில் லிப்ட் கேட்டு ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.

கீழதட்டப்பாறை அருகே வந்தபோது, லாரி ஒரு திருப்பத்தில் திரும்பி உள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பிரவீன் காந்த் கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் செய்திகள்