‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2022-02-19 17:14 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சமுதாயக்கூடம் சீரமைக்கப்படுமா?

திருவாரூர் மாவட்டம் வேலங்குடி ஊராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக சமுதாயக்கூடம் ஒன்று கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் சமுதாய கூட கட்டடித்தின் சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சுவரில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுவர் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சமுதாயக்கூட கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்