வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
உடன்குடி:
திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியை சேர்ந்தவர் முண்டசாமி (வயது 53). இவர் தங்க நகை பட்டறை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், பின்னர் தச்சு வேலை செய்தார். இதிலும் போதிய வருமானம் இல்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்தார். இந்த நிலையில் தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனவேதனை அடைந்த முண்டசாமி உடன்குடி மையப்பகுதியில் உள்ள காட்டுக்குள் ெசன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முண்டசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளாத்திகுளம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் மணிராஜ் மகன் காளிதாஸ் (17). இவர் விளாத்திகுளத்தில் உள்ள கோழி கறிக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது
சம்பவத்தன்று இரவு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த காளிதாஸ் தனது தாயாரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவரை குடும்பத்தினர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த காளிதாஸ் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.