கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 70.5 சதவீத வாக்குகள் பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி இறுதியாக 70.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

Update: 2022-02-19 17:03 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி இறுதியாக 70.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
உள்ளாட்சி தேர்தல் 
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், நாகோஜனஅள்ளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.
மொத்தம் 170 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இந்த தேர்தலில் 827 பேர் போட்டியிடுகிறார்கள். காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையொட்டி காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள். கிருஷ்ணகிரி நகராட்சி  1-வது வார்டு தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் நகரசபை தலைவருமான பரிதா நவாப், நகராட்சி பெண்கள் உருது நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.
மாவட்டத்தில் சில இடங்களில் வேட்பாளர்கள் வாக்குச்சாவடிகளின் அருகில் ஓட்டு சேகரித்த நிலையில், மாற்றுக்கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர். 
ஆர்வமுடன் வாக்களிப்பு 
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்தனர். கர்ப்பிணிகள், முதியவர்கள், மூதாட்டிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு விவரம் அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
காலை 9 மணி நிலவரம் 
ஓசூர் மாநகராட்சி - 7.74
கிருஷ்ணகிரி நகராட்சி -12.14
பேரூராட்சிகள்
பர்கூர்- 13.43
தேன்கனிக்கோட்டை- 10.52
காவேரிப்பட்டணம்- 10.27
கெலமங்கலம்- 11.09
நாகோஜனஅள்ளி- 14.08
ஊத்தங்கரை -12.19
காலை 11 மணி நிலவரம் 
ஓசூர் மாநகராட்சி - 20.48
கிருஷ்ணகிரி நகராட்சி -28.22
பேரூராட்சிகள்
பர்கூர் -29.62
தேன்கனிக்கோட்டை- 26.43
காவேரிப்பட்டணம் - 25.17
கெலமங்கலம்- 27.39
நாகோஜனஅள்ளி- 33
ஊத்தங்கரை- 28.03
பிற்பகல் 1 மணி நிலவரம் 
ஓசூர் மாநகராட்சி - 35.81
கிருஷ்ணகிரி நகராட்சி -46.87
பேரூராட்சிகள்
பர்கூர்- 50.34
தேன்கனிக்கோட்டை- 43.65
காவேரிப்பட்டணம்- 47.05
கெலமங்கலம்- 46.19
நாகோஜனஅள்ளி- 58.29
ஊத்தங்கரை-41.88
மாலை 3 மணி நிலவரம் 
ஓசூர் மாநகராட்சி - 47.31
கிருஷ்ணகிரி நகராட்சி -60.08
பேரூராட்சிகள்
பர்கூர்- 67.53
தேன்கனிக்கோட்டை- 56.61
காவேரிப்பட்டணம்- 63.65
கெலமங்கலம்-59.24
நாகோஜனஅள்ளி - 72.81
ஊத்தங்கரை - 55.82
மாலை 5 மணி நிலவரம்
ஓசூர் மாநகராட்சி - 58.50
கிருஷ்ணகிரி நகராட்சி -74.03
பேரூராட்சிகள்
பர்கூர் - 79.84
தேன்கனிக்கோட்டை- 67.64
காவேரிப்பட்டணம்- 76.88
கெலமங்கலம்- 71.77
நாகோஜனஅள்ளி- 82.87
ஊத்தங்கரை-66.30
70.5 சதவீத வாக்குகள் பதிவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி இறுதியாக 70.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
ஒவ்வொரு பகுதியிலும் பதிவான வாக்குகள் சதவீதத்தில் வருமாறு:-
ஓசூர் மாநகராட்சி - 63.97
கிருஷ்ணகிரி நகராட்சி - 79.03
பர்கூர் பேரூராட்சி - 81.54
தேன்கனிக்கோட்டை பேரூராட்சி - 70.9
காவேரிப்பட்டணம் பேரூராட்சி - 80.15
கெலமங்கலம் பேரூராட்சி - 74.41
நாகோஜனஅள்ளி பேரூராட்சி - 84.07
ஊத்தங்கரை பேரூராட்சி - 69.89
மொத்தம் - 70.5 சதவீதம்
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட ஐ.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற ஓட்டுப்பதிவுகளை கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்