பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்த கலெக்டர்
பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்த கலெக்டர்
திருப்பூர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு விவரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். மேலும் அவினாசி அரசு மேல்நிலைப்பள்ளி, திருமுருகன்பூண்டி அரசு பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதுபோல் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆணையாளர் கிராந்திகுமார் பாடி வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார். அரண்மனைப்புதூர், கே.எஸ்.சி. பள்ளிகளில் அவர் ஆய்வு நடத்தினார். திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மற்றும் கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் இருந்தபடி மாவட்டத்தில் உள்ள 224 பதற்றமான வாக்குச்சாவடிகளையும் வெப் கேமரா வசதி மூலமாக நேரடியாக பார்வையிட வசதி செய்யப்பட்டு இருந்தது. இந்த மையத்துக்கு சென்ற கலெக்டர் வினீத், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவை கண்காணித்தனர். 9 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா இணைப்பு சரிவர கிடைக்காமல் இருந்தது. அவற்றை சரி செய்ய அறிவுறுத்தினார்கள்.