உரிமையாளர்களை சிக்க வைக்க காவலாளி தீக்குளித்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
உரிமையாளர்களை சிக்க வைக்க காவலாளி தீக்குளித்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.;
கோவை
மதுரை மாவட்டம் தெற்கு மாசிவீதியை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 76). இவர் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் கொடிசியா அருகே உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவரிடம் பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனக்கு தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலிப்குமார் மற்றும் அதிகாரி ஜான் ஆகியோர் சம்பளம் தரவில்லை.
மேலும் அவர்கள், தன்னை தாக்கி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறினார். அதன்பேரில் அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சிகிச்சை பலனின்றி ரத்தினவேல் இறந்தார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ரத்தினவேல் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தானே தீ வைத்துக் கொண்டதும், ஆனால் திலிப்குமார் மற்றும் ஜான் ஆகியோரை பழி வாங்கும் நோக் கிலும்,
அவர்களை போலீசில் சிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாக வாக்குமூலம் அளித்ததும் விசாரணையில் அம்பலமானது.
இதைத்தொடர்ந்து ரத்தினவேல் சாவு தொடர்பாக பதிவான கொலை முயற்சி வழக்கை பீளமேடு போலீசார் தற்கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.